இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு!

India Covid 19
By Thahir Jun 23, 2021 05:02 AM GMT
Report

நேற்று 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு! | Covid19 India

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவிய நிலையில் தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,358 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு! | Covid19 India

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது நாடு முழுவதும் 6,43,194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.