இந்தியாவில் 3 கோடியை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தொட உள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 53.256 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1422 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 78 ஆயிரத்து 190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 2 ஆயிரத்து 887 ஆக உள்ளது.