தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று..!

COVID-19
By Thahir Apr 21, 2022 04:54 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்த விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 34,53,351-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,085 ஆக உள்ளது. ஒரே நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,083 ஆக உயர்ந்துள்ளது.