சென்னையில் குறைந்தது கொரோனா தொற்று!

Corona Covid19 Chennai
By Thahir Jun 21, 2021 10:23 AM GMT
Report

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்திருந்த நிலையில் அதன் பரவல் சென்னை மாநகரில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்தது கொரோனா தொற்று! | Covid19 Chennai

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்தநிலையில் சென்னையில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியுள்ளது.

சென்னையில் குறைந்தது கொரோனா தொற்று! | Covid19 Chennai

சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 1,316 ஆகக் குறைந்து பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.2 ஆக உள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து 98 சதவீதம் பேர் குணமடைந்து இருப்பதாகவும்,இறப்பு விகிதம் 1.52 சதவீதமாக குறைய தொடங்கியுள்ளது.