இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழப்பு..!

COVID-19
By Thahir Apr 30, 2022 02:20 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,72,176 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு 17,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.