ஒலிம்பிக் தொடரில் கொரோனாதான் தங்கம் வெல்லும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 2 தடகள வீரர்கள், தென் ஆப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் 3 வீரர்கள் என 5 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில போட்டிகள் வீரர்களுக்கு இடையே உடல் ரீதியான தொடர்பு இருப்பதால் அவற்றின் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியே சென்றால் ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா தான் தங்கம் வெல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.