கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

COVID-19 World Health Organization
By Irumporai Dec 04, 2022 11:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

மிரட்டிய கொரோனா 

2019-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா உயிர்க்கொல்லி வரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் 65 லட்சம் உயிர்களை பழிவாங்கியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய பெருந்தொற்று இந்த ஆண்டு படிப்படியாக குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போது கொரோனா பரவல் தாக்கல் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கிறது : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு | Covid Who Chief Warn China Virus

இந்த நிலையில் மீண்டும் கொரோன பரவும் ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவல் குறித்து பேசிய அதானோம் சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய அதானோம் அங்கு நடந்து வரும் போராட்டங்களுக்கு கவலை தெரிவித்தார். 

மீண்டும் அதிகரிக்கலாம் 

தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை பிரிவு தலைவர் மைக்குரியான் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தும் பொறுப்புடன் மனித உரிமையையும் சம அளவில் பேன வேண்டிய கடமை சீனாவுக்கு உள்ளதாக கூறினார்.

இதனிடைய குளிர் பிரதேச நாடுகளில் பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல லட்ச கணக்கானோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளூடன் கொரோனா பாதிக்கும் போது அதன் மரணத்தை ஏற்படுத்தாலம் என்றும் இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் எதிர்பாரத்த அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்துள்ளது.

எனவே தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளது.