6 -12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

COVID-19 COVID-19 Vaccine
By Swetha Subash Apr 26, 2022 11:41 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.