தமிழகத்திற்கு மேலும் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து சோ்ந்தன.

Covid Vaccine Chennai
By Thahir Jul 01, 2021 12:52 PM GMT
Report

தமிழகத்திற்கு மேலும் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து சோ்ந்தது.

தமிழகத்திற்கு மேலும் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் சென்னைக்கு  வந்து சோ்ந்தன. | Covid Vaccine Tamilnadu

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாடு அரசு,ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் ஜுன் மாதத்திற்கான ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்று கூறி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த இரு தினங்களாக தடுப்பூசிகளை அனுப்பவில்லை.இதனால் தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் ஜுலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இன்று மாலை சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 1076 கிலோ எடையில் 34 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.

தமிழகத்திற்கு மேலும் 4.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் சென்னைக்கு  வந்து சோ்ந்தன. | Covid Vaccine Tamilnadu

தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறையினரிடம் சென்னை விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் தடுப்பூசி பாா்சல்களை ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகம் முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.