2 டோஸ் தடுப்பூசி போட்டால் 98% பாதுகாப்பு - மத்திய அரசு தகவல்
Covishield
Covid vaccine
Covaxin
Modi
Sputnik
By Petchi Avudaiappan
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை, 2ஆம் அலை என அதன் தாக்கம் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் தடுப்பூசி போட தயக்கம் காட்டிய மக்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று கூறப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறியுள்ளார்.