தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆப்பிள் ஐபேட், ஏர்போட்ஸ் இலவசம் - அதிரடி சலுகை!
உலகம் முழுவதும் கொரோனாவின் 2-ம், அலை வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துங்கள் என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் உலக நாடுகள் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அமெரிக்காவில் உணவகங்களில் இலவச உணவு, மதுபான கடைகளில் இலவச பீர், உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.
மேலும் சில நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பார்களில் இலவசமாக கஞ்சா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க மக்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன் மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவசமாக பீர் வழங்கப்படும் என அறிவித்தார்.
தற்போது வாசிங்டன் மேயர் முரியல் பவுசர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது முதல் டோஸ் எடுத்துக்கொள்ளும் இளைஞர்களுக்கு உலகின் நம்பர் 1 நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் Airpods இலவசமாகப் பரிசளிக்கப்படும் என்றும், லக் இருந்தால் 25 ஆயிரம் டாலர் உதவித்தொகையோ அல்லது ஆப்பிள் ஐபேடோ பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.