எல்லா வகை வைரஸ்களையும் விரட்டும் சூப்பர் தடுப்பூசி...
பல்வேறு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை இரண்டு டோஸ்களாக உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரேவொரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இதனை அவசரகால பயன்பாட்டிற்காக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இதன் செயல்திறன் குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்களது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள் டெல்டா வகை வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பல்வேறு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படக்கூடிய வலிமையான ஆன்டிபாடிக்களை பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் வைரஸை தடுக்கும் வல்லமை பெற்றுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.