கொரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம் - மருத்துவ வல்லுநர் குழு!
covid
vaccine
pm
By Anupriyamkumaresan
4 years ago

Anupriyamkumaresan
in ஆரோக்கியம்
Report
Report this article
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து மருத்துவ வல்லுநர் குழு பிரதமரிடம் அளித்துள்ள அறிக்கையின்படி, நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனை தருகிறதா என்பதை உறுதி செய்த பிறகு தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அதுவரை தொற்றால் குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும், தற்போது யாரெல்லாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.