அமெரிக்காவில் ஜான்சன் நிறுவனத்தின் 3வது தடுப்பூசிக்கு அனுமதி- ஒரு முறை செலுத்தினால் போதும்!
உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இதனிடையே, மூன்றாவது தடுப்பூசியாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், இந்த மருந்தையும் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பும் பணி நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சுமார் 4 மில்லியன் டோஸ் மருந்துகள் வர உள்ளன. மார்ச் இறுதிக்குள் 20 மில்லியன் டோஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற தடுப்பூசி மருந்துகளை இரண்டு முறை செலுத்த வேண்டும். ஆனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்தை ஒரு முறை செலுத்தினால் போதும்...