மிக விரைவில் புதிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

corona people world
By Jon Feb 16, 2021 04:15 PM GMT
Report

மிக விரைவில் புதிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது - கொரோனா வைரஸுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுவரை 80 முதல் 85 சதவீதம் வரையிலான சுகாதாரப் பணியாளர்களுக்கு இவை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பு மருந்துகளால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மாதத்திலேயே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இதுவே இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும். இன்றைய சூழலில், நம் நாட்டில் 18 முதல் 19 கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன. எனவே, அடுத்த சில மாதங்களில் புதிய கொரோனா தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Gallery