3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - வெளியான புதிய தகவல்

covidvaccine கொரோனா தடுப்பூசி
By Petchi Avudaiappan Dec 14, 2021 05:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி உருவாகும் என சீரம் நிறுவனம் கூறியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 12-வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.