கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் எடுத்துக்கொள்ள வேண்டும்: பைசர் நிறுவனம்
கொரோனா பரவத் தொடங்கி ஒரு வருடம் ஆன பிறகும் அதன் வீரியம் குறையாமல் பரவி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலின் இரண்டாம், மூன்றாம் அலையை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுவாக பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளன.
அதே சமயம் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொண்டால் நீடித்த பாதுகாப்பு கிடைக்குமா என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஃபைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட், “கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் 12 மாதங்கள் கழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நீடித்த பாதுகாப்பு கிடைக்கும்.
தற்போது உள்ள இரண்டு டோஸ் ஆறு மாதம் முதல்எட்டு மாதம் வரை பாதுகாப்பு அளிக்கிறது. கொரோனா தடுப்பூசி வருடம் தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை எழலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.