ஞாயிற்றுகிழமைகளில் மது மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

tngovernment ministermasubramanian covidvaccinecamp
By Petchi Avudaiappan Oct 18, 2021 04:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகம் முழுவதும் வரும் வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைகளில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இச்சேவை எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் வாகனம் வாங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும்,  சென்னையில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் மக்களை தேடி பல் மருத்துவச்சேவையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

மேலும் இந்த வாரம் (அக்டோபர் 23) 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 50 ஆயிரம் முகாம்களின் மூலம் நடக்கும் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம்  ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமையில் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்த அசைவ பிரியர்களும் மது பிரியர்களும் தயக்கம் காட்டி வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.