தடுப்பூசி தட்டுப்பாடு… ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி..!
covid
vvaccine
k n nehru
byte
By Anupriyamkumaresan
தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தடுப்பூசி தட்டுப்பாடு ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை மத்திய அரசு தான் வழங்குகிறது, அவை இன்னும் வரவில்லை என்றும், 18 முதல் 45 வயதினருக்கான தடுப்பூசியை தான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்