கொரோனா தடுப்பூசி செலுத்துவதை நேரில் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறும், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதையும், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி போடப்படுவதையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசு கொறடா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் என பல உயரதிகாரிகள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.