மதுரையில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..

MK Stalin Madurai Covid treatment ward
By Petchi Avudaiappan May 21, 2021 05:58 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரையில் 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தடுப்பு பணிகள் குறித்து 5 மாவட்டங்களில் ஆய்வு செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை,திருச்சியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

அந்த வகையில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் 500 படுக்கைகள் கொண்ட ஆக்சிஜன் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மின் விசிறி மற்றும் ஆவி பிடிக்கும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.