அதிகரிக்கும் கொரோனா - அச்சத்தில் மக்கள்!! எவ்வளவு தெரியுமா?
today
tamilnadu
covid list
By Anupriyamkumaresan
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 61ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20ஆயிரத்து 524 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில், 26 பேர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 2,156 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 06 ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது.