தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

covid19 tamilnadu
By Irumporai May 24, 2021 04:42 PM GMT
Report

தமிழகத்தில் இன்று 35 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்த நிலையில் இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது.

நேற்று 35 ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் இன்று 34,867 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல இன்று ஒரே நாளில் 27,026 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில்  குறையும் கொரோனா பாதிப்பு! | Covid Tamilnadu Today Covid19 India





இது வரை மொத்தமாக  குணமானோர் எண்ணிக்கை 15,54,759 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு இன்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20,872 ஆக அதிகரித்துள்ளது.