கிறிஸ்துமஸ், புத்தாண்டில் தாஜ்மஹாலை பார்வையிட வேண்டுமா? கொரோனா பரிசோதனை கட்டாயம்...!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கும், இந்திய மக்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்து.
கொரோனா பரிசோதனை கட்டாயம்
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவிற்கு வருகை தந்து தாஜ்மஹாலை பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், அண்டை நாடான சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்திய மக்கள் முகமூடி அணிவது, கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக விடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தாஜ்மஹாலுக்கு வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனைகளை கட்டாயம் என்று ஆக்ரா நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் தகவல் அதிகாரி (ஆக்ரா) அனில் சத்சங்கி கூறுகையில், மக்களில் கொரோனா வைரஸைக் கண்டறியவும், நோய்க்கிருமி மேலும் பரவுவதைத் தடுக்க தற்போது சோதனை தொடங்கியுள்ளது. தாஜ்மஹாலுக்கு வருகை தரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்றார்.