தமிழகத்தில் 1,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!

Covid 19 Tn health ministry
By Petchi Avudaiappan Jul 27, 2021 04:04 PM GMT
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,52,049 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,966 ஆக உள்ளது. 

மேலும் 2,312 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,95,895 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 169 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 139 பேருக்கும், சேலத்தில் 98 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.