2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு - இன்றைய முழு நிலவரம்

தமிழகத்தில் இன்று 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,39,277 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,782 ஆக உள்ளது. மேலும் 2,439 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,78,778 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 204 பேருக்கும், ஈரோட்டில் 129 பேருக்கும்,, சென்னையில் 141 பேருக்கும், சேலத்தில் 133 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்