புதிதாக 4013 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Tn government Covid status
By Petchi Avudaiappan Jul 03, 2021 02:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 4013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழே பதிவாகியுள்ளது.

புதிதாக 4013 பேருக்கு கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 4,724 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 23 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 35 ஆயிரத்து 881 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.