8 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு... இன்றைய பாதிப்பு நிலவரம்...

Covid positive
By Petchi Avudaiappan Jun 20, 2021 03:39 PM GMT
Report

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 7817 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,22,497ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 455 பேருக்கும், திருப்பூரில் 477 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,197ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 17,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.