கொரோனா தடுப்பூசி போட்ட இளைஞர் மரணம் : 1.4 கோடி நிவாரணம் கொடுத்த சிங்கப்பூர் அரசு

Singapore
By Irumporai Feb 19, 2023 12:45 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா தடுப்பூசி போட்ட பின்னர் மரணம் அடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 1.4 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

 கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்க தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்த வகையில் சிங்கப்பூரில் நான்கு வகையான தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், மாடர்னாஸ்பைக்வாக்ஸ் என்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்த தடுப்பூசி போட்ட 21 நாட்களுக்கு பின்னர், அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி திடீரென இறந்தார். இவரது மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதையடுத்து அந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்ட இளைஞர் மரணம் : 1.4 கோடி நிவாரணம் கொடுத்த சிங்கப்பூர் அரசு | Covid Singapore Says Death Of Man

சிங்கப்பூர் அரசு

அதன் அறிக்கை மற்றும் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தடுப்பூசி போட்ட இளைஞர் ஒருவர், அடுத்த 21 நாட்களில் இறந்தார்.

அவரது இறப்புக்கான காரணம், ‘மயோர்கார்டிடிஸ்’ என்று சான்றளிக்கப்பட்டது. இது கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது அதனால் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு இந்திய மதிப்பில் ₹1.4 கோடி நிவாரணம் வழங்கப்படும என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்துமா ? என்ற கேள்வி தற்போது சர்வதேச அளவில் உலவும் நிலையில் சிங்கப்பூர் அரசின் இந்த அறிவிப்பு உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.