கொரோனா வந்தால் கண் தெரியாதா? - சந்தேகத்தை தீர்த்த மருத்துவ குழு!
கொரோனா தொற்று வந்தால் கண்ணுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவின் பின் விளைவுகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் பலரும் கொரோனா வந்தால் பிற்காலத்தில் கண் பிரச்சினை வருமா என குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வந்தால் கண்ணுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், ஏற்கனவே கண்ணில் பிரச்சினை உள்ளவர்களுக்கு பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
அதையும் ஆரம்ப காலத்திலேயே சரிசெய்து விட்டால் அந்த பாதிப்பும் இருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.