மக்களே கொரோனா 2 வது அலை இன்னும் ஒயவில்லை : எச்சரிக்கும் மத்திய அரசு!

india lavagarwal corona secondwave
By Irumporai Aug 03, 2021 01:13 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா 2-வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். அவரின் கருத்து படி:

  இந்தியாவில் ஜூன் 1-ம் தேதி 279 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு பதிவானது.

தற்போது அந்த எண்ணிக்கை 57 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயம் சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 2-வது அலை பரவல் இன்னும் முடியவில்லை ஆகவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியாவில் கேரளாவில் 10 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

இந்த 18 மாவட்டங்களில் 47.5 சதவீதம் பாதிப்புகள் பதிவாகின்றன. நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக கூறியுள்ளார்.