வேகமெடுக்கும் கொரோனா - சென்னை ஐ.ஐ.டி-யில் தொற்று பாதிப்பு 145-ஆக உயர்வு

COVID-19 Chennai
By Swetha Subash Apr 27, 2022 01:30 PM GMT
Report

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேகமெடுக்கும் கொரோனா - சென்னை ஐ.ஐ.டி-யில் தொற்று பாதிப்பு 145-ஆக உயர்வு | Covid Raises In Iit Madras

அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது.

4,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 2,729 பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.