கொரோனாவால் வறுமை- மகள்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்மார்கள்
கொரானா கால வறுமை காரணமாக சில பெண்கள் தங்களின் மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள பலர் கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் வேலை இழந்த பெண்கள் தங்கள் மகள்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி வருகின்றனர்.
வயதிற்கேற்ப பணம் கொடுத்து வருகின்றனர் அந்த கும்பல். அந்த வகையில் மால்வாணி பகுதியை சேர்ந்த ஒரு 45 வயது பெண், தனது 17 வயது மகளை ஒரு இரவுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை விலை பேசியுள்ளார்.
மேலும் வயதான பெண்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகள்களை விற்ற தாய் மற்றும் தரகர்கள் சிலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.