கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம் - உத்தராகண்டில் பதற்றம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கும்ப மேளா நடைபெற்று வருகிறது. இதற்கு நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வத் வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வருவதால் கும்ப மேளா நிகழ்வை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் கும்ப மேளா மே மாதத்தின் இறுதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பலரும் வெளியேறி சென்றுவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்ப மேளா நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சையில் இருந்தவர்கள் மாயமாகி உள்ளதால் அதிகாரிகளும் காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.