கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விவரத்தை கண்டறியும் பணி தீவிரம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் விவரத்தை திரட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி வங்கி கணக்கில் வைக்கப்படும் என்றும் அவர்களுக்கு 18 வயது முடிந்தவுடன் அந்த பணம் கொடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், அவர்களது கல்விச் செலவை முழுவதுமாக அரசே ஏற்பதாக உறுதி அளித்துள்ளது.இந்த நிலையில், கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரத்தை தமிழக அரசு திரட்டவேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட வாரியாக 24 மணி நேரத்தில் விவரங்களை திரட்டி குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை கண்டறியும் பணியை வேகமாக செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.