கொரோனா தடுப்பூசி இயக்கத்தை இந்தியா பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

covid modi pm
By Jon Jan 15, 2021 08:22 PM GMT
Report

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. கோவிஷியல்ட் மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில் உள்ளன.

இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 6 இடங்களில் இத்திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நாளை இந்த ஊசி செலுத்தப்படுகிறது.