தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு..!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது.
எனினும், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,734 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,80,47,534 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஒரே நாளில் 3128 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரே நாளில், 2,38,022 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,56,92342 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 50 நாட்களில் இன்றுதான் குறைந்த அளவிலான தினசரி தொற்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 18வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.