கொரோனா மேலாண்மை மாநாடு: 9 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது இந்தியா

srilanka asia south
By Jon Feb 19, 2021 01:12 AM GMT
Report

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா இன்று நடத்துகிறது. ‘கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டுக்கு, தெற்காசிய பகுதியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மொரீஷியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமை வகிக்கும் இந்த மாநாட்டுக்கு, ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதன் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மை தொழில்நுட்பக் குழுத் தலைவர் என தலா இருவர் அழைக்கப்பட்டுள்ளனர்.