கொரோனா அச்சம் - குழந்தையோடு 18வது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலை ! குடும்பமே உயிரிழந்த சோகம்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த மின் பொறியாளர் ரவிராஜா, மனைவி சத்யாபாய் மற்றும் 5வயது மகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வசித்து வந்தார்.
கொரோனா இரண்டாவது அலையில் ரவி ராஜா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சத்யாபாய்க்கும் அவரது 5 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே அவதிப்பட்டு வந்துள்ளனர்.
தங்களை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என எண்ணிய சத்யாபாய் மூச்சித்திணறலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் விரக்தியடைந்த, சத்யாபாய் 5 வயது மகளுடன் சேர்ந்து 18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடுமையை அறியாத ரவிராஜாவும், சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஒரு குடும்பமே சிதைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.