கொரோனாவுக்கு பயந்து மனைவி, குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்த கொடூர கணவன்!!
ஆந்திரா அருகே கொரோனாவுக்கு பயந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரால் வீட்டில் அடைத்து வைத்த அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்குள் புகுந்து போலீசார் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜோலு கிராமத்தை சேர்ந்த 35 வயது விவசாயி, மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியபோது தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடைத்து வைத்து வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் யாருடனும் பேசவிடாமல்,
வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரதான் மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா வந்துவிடும் என்பதால் வெளியே வர முடியாது என கூறி கதவை திறக்க மறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர்.
உள்ளே சென்று
பார்த்ததில் அவர்கள் 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை மீட்டு மருத்துவமனையில்
அனுமதித்தனர்.