வேலூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரியும் ஊழியர்களின் அவல நிலை.!

India Corona Tamil Nadu Vellore
By mohanelango Apr 20, 2021 02:15 PM GMT
Report

வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில், எந்த வித பாதுகாப்பு உடையும் இல்லாமல் கொரானா வார்டில் பணி புரியும் பணியாளர்களின் பரிதாப நிலை.

வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கொரானா நோயாளிகளுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு பணி புரியும் பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் கொரானா நோயாளிகளை கையாள்வதற்காக வழங்கப்பட்டுள்ள PPE தனிப்பட்ட சீருடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரானாவைரஸ் தொற்று யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிமுறைகளையும் நோயாளிகளுக்காக தனிப்பட்ட உடைகளும் வழங்கும் அரசு, அவர்கள் தங்கி சிகிச்சை பெறும் வார்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எந்த விதப் பாதுகாப்பு உடையும் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது, அவர்களின் உடல் நலனில் கேள்விக்குறியாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு பணியாளர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் அவர்களுக்கு முகக்கவசம் கையுறை மற்றும் தனிப்பட்ட சீருடைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.