கொரோனாவுக்கு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சோகம்..!
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 29 வயதான 8 மாத கர்ப்பிணி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் இளம் வயதினர் பலரும் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 மாத கர்ப்பிணியான கார்த்திகா என்ற மருத்துவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது.

கர்ப்பிணியான இவருக்கு, சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.