கொரோனா நோயாளி மரணம் - மருத்துவர்களை தாக்கிய உறவினர்களால் பரபரப்பு

Corona Death Protest Arakkonam GH
By mohanelango May 20, 2021 05:20 AM GMT
Report

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர்.

இதனைக் கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த முன்று தினங்களுக்கு முன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இன்று மாலை சிகிச்சை பலனின்றி முச்சு தினறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆக்சிஜன் வழங்கி சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனை ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கொரோனா நோயாளி மரணம் - மருத்துவர்களை தாக்கிய உறவினர்களால் பரபரப்பு | Covid Dead Patient Relatives Attack Doctors

மேலும் மருத்துவர்கள், செவிலியர்களை தரக்குறைவாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவர்கள், செவிலயர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி பணிகளை புறக்கணித்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்கள்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துறையினர் மருத்துவமனை ஊழியர்களிடம் உரிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்து தாக்குதல் நடத்திய நபரை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்கள். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.