உலகில் 10 நாடுகள் மட்டுமே 95% கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடையப்போகிறது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும் கொரோனா பரவல் தீவிரமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை இன்னும் தீவிரமாக தொடர வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகளில் 95% 10 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ந்த நாடுகள் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் உதவிகளையும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கி முடிக்க 2022-ம் ஆண்டின் இறுதி ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.