இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு 3000 - மத்திய சுகாதாரத்துறை.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த பாதிக்கப்படுவோர், பலியானோர் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,32,788 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த ஒரே நாளில் 3,207 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை எண்ணிக்கை 3,35,102 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரே நாளில், 2,31,456 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,79,085 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 20வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.