கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது - WHO எச்சரிக்கை
கொரோனா தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்திய அமைந்த கொரோனா தொற்று, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக வெளிப்பட்டது. பல லட்சம் உயிர்களை வாங்கிய கொரோனா தொற்று தோன்றி ஓராண்டு கடந்து விட்ட நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது.
கொரோனா பரவல் பல நாடுகளிலும் குறைந்து வருகிறது. இதனையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: தொடர்ந்து 4-வது வாரமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது வாரமாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.
பல நாடுகளிலும் பொதுசுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளதின் விளைவுதான் இது என்று தோன்றுகிறது.
இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால் இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரசைப்போலவே ஆபத்தானது. தற்போது கட்டுப்பாடுகளை எந்த நாடுகளும் தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.