சென்னை ஐ.ஐ.டி-யில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஐஐடி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியில் கடந்த 5 நாட்களில் 1700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதுவரை 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 40 பேர் குணமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அங்கு கொரோனா பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரப்படுத்தி வருகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை.