கொரோனாவில் இருந்து விடுதலை பெறும் அமெரிக்கா

America Joe biden Covid cases
By Petchi Avudaiappan Jul 07, 2021 04:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்புகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

கொரோனாவில் இருந்து விடுதலை பெறும் அமெரிக்கா | Covid Cases Decrease In America

இதனை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடுவது என்ற திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜோ பைடன் அரசு உள்ளது.

இதனிடையே இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.