மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா; மாஸ்க் கட்டாயம் - விரைவில் லாக்டவுன்?
கொரோனா பாதிப்பால் 3 மாநிலங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முந்தைய வாரங்களை ஒப்பிடும்போது கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒருநாளில் மட்டும் இந்தியாவி்ல 6,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 31,194 ஆக அதிகரித்துள்ளது. 11 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் உரிய தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாஸ்க் கட்டாயம்
ஹரியானா மாநிலத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 2வது கேரளாவில் கர்ப்பிணிகள், முதியர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: சுக்கிர புத்திரர்களான ரிஷப ராசியினருக்கு எப்படி அமையப்போகிறது? Manithan