தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

Covid19 Increase Case Tamilnadu கொரோனா
By Thahir Jan 02, 2022 04:37 PM GMT
Report

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றும் கொரோனா பாதிப்பு நேற்றை விட கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 51 ஆயிரத்து 128- ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து மேலும் 624- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 776- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9,304- ஆக உயர்ந்துள்ளது.